திங்கள், 17 மே, 2010

பரிகாரம்


















அன்றொரு நாள்..
உன் திவ்விய அழகை
ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்தேன்..
கண்களை வரைய  நினைத்தேன்..
மெய் மறந்தேன் ..
தூரிகை கிழே விழுந்தது ..

வேறொரு நாள்   ..
உன்  மோகன  அழகை
சிற்பமாக வடித்து கொண்டிருந்தேன்..
கண்களை செதுக்க ஆரம்பித்தவுடன் 
மெய் மறந்தேன் ..
உளி  கிழே விழுந்தது .. 

மற்றொரு நாள் ..
உன் செளந்தரிய வதனத்தை
பற்றி கவிதை எழுதி கொண்டிருந்தேன் ..
உன் கண்களை பற்றி சொல்ல
நினைத்த போது மெய் மறந்தேன் ..
பேனா கிழே விழுந்தது ..  

இன்று உன்னிடம் கேட்டேன் ..
உன் கண்கள் என் நினைவை
விட்டு செல்ல பரிகாரம் தெரிந்தால் சொல்லேன் என்று
நீ சொல்கிறாய்..
உன் இதயம் என் நினைவை விட்டு   செல்ல பரிகாரம் தெரிந்தால் சொல் ..
நானும் சொல்கிறேன் என்று .......

4 கருத்துகள்:

  1. பெயரில்லா6:45 PM, மே 20, 2010

    //உன் கண்களை பற்றி சொல்ல
    நினைத்த போது மெய் மறந்தேன் ..
    பேனா கிழே விழுந்தது .. //

    பேனா இல்லாம எப்படிப்பா கவித எழுதின..
    ம்.. ஒன்னு மட்டும் தெரியுது.. நீ எந்த பட்சிகிட்டேயோ வசமா மாட்டிக்கிட்டன்னு..

    பதிலளிநீக்கு
  2. //நீ எந்த பட்சிகிட்டேயோ வசமா மாட்டிக்கிட்டன்னு..//

    அனுஷ்கா(வேட்டைக்காரன் படத்துல கூட நடிச்சுதே..அந்த பொண்ணுதான் ) வோட தொந்தரவு தான் வர வர தாங்க முடியல ..யார் என்ன பத்தி சொன்னாகனு தெரியல .
    தெனமும் night 10 மணி ஆன போதும் என்கிட்டே பேசுனாதான் தூக்கமே வருதாம .....
    Phone -ஐ switch off பண்ணி வச்சா நேர்லயே வந்துருவனு சொல்லராங்க ...
    வசமா மாட்டிக்கிட்டன்னு சொன்னா நம்பவா போறிக...

    பதிலளிநீக்கு
  3. கண்களைபற்றிய கவிதை ரசனையாக இருக்கு!

    (பாவம்ங்க அனுஷ்கா....)

    பதிலளிநீக்கு
  4. //(பாவம்ங்க அனுஷ்கா....) //


    விதி வலியது -னு சும்மாவா சொன்னாக ...
    தாங்கள் வருகைக்கு நன்றி Priya...

    பதிலளிநீக்கு